×

காஷ்மீரில் கடந்த 22ம் தேதி நடந்த என்கவுன்டரில் கொல்லப்பட்டது ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதி..: காவல்துறை வட்டாரங்கள் தகவல்!

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் கடந்த 22ம் தேதி நடந்த என்கவுன்டரில் கொல்லப்பட்து ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி, அம்மாநில காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து விலக்கப்பட்டு, யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பிறகு, அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. எனினும், எல்லையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் அவ்வப்போது ஊடுருவ முயற்சித்து வருகின்றனர். பாதுகாப்பு படையினர் அந்த ஊடுருவல் முயற்சிகளை உடனுக்குடன் தடுத்து நிறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், அனந்த்நாக் மாவட்டம் சந்திராக் பகுதியில், ஒரு வெளிநாட்டு தீவிரவாதி உள்பட ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, 21ம் தேதி அதிகாலையில் காஷ்மீர் மாநில போலீசார், 50 ராஷ்டிரிய ரைஃபில்ஸ் படையை சேர்ந்த வீரர்கள் மற்றும் 180 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் ஆகியோர் சந்திராக் பகுதியில் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

அப்போது, பாகாப்பு படையினர் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலில், ராஷ்டிரிய ரைஃபில்ஸ் சிப்பாய் ராகுல் பன்ஸ்வால் மற்றும் காஷ்மீரின் சிறப்பு போலீஸ் அதிகாரி ஷாபாஸ் அகமது ஆகியோர் பலத்த காயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதற்கிடையில், அப்பகுதியில் இருந்த தீவிரவாதிகள் தப்பத்துவிட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து, 22ம் தேதியன்று நாகந்தர் கிராமத்தில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, தீவிரவாதி ஒருவனை சுட்டுக்கொன்ற பாதுகாப்பு படையினர், அவனது உடலை கைப்பற்றி அவனிடம் இருந்த ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை மீட்டனர். இந்த நிலையில், என்கவுன்டரில் கொல்லப்பட்ட தீவிரவாதி ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புடன் தொடர்புடைய அபு சைபுல்லாஹா என்பது தெரியவந்துள்ளது. இவன், அவந்திபோரா மாவட்டத்தின் டிரால் மற்றும் க்ரூ பகுதிகளில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக தீவிரமாக செயல்பட்டு வந்ததாக காஷ்மீர் காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.



Tags : Jaish-e-Mohammed ,encounter ,Kashmir Jaish ,Jan ,Kashmir , Kashmir, Anantnag, encounter, Jaish-e-Mohammad, militant
× RELATED புல்வாமா தாக்குதல் நடைபெற்று இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவு