×

ஜனநாயக பட்டியலில் சரிவு இந்தியாவுக்கு அபாய ஒலி ப.சிதம்பரம் எச்சரிக்கை

புதுடெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவு: கடந்த 2 ஆண்டுகளாக நாட்டு நடப்பை உன்னிப்பாக கவனித்து வந்த எவருக்கும், ஜனநாயகம் அழிக்கப்பட்டு, ஜனநாயக நிறுவனங்கள் பலவீனமடைந்து இருப்பது நன்றாக தெரியும். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களே `துக்கடே துக்கடே’ கும்பலை சேர்ந்தவர்கள். ஜனநாயக நாடுகள் பட்டியலில் 10 இடங்கள் பின்தங்கி, இந்தியா அழிவை நோக்கி சென்று கொண்டிருப்பது உலக நாடுகளை எச்சரிக்கை அடைய செய்துள்ளது. இது நாடு பயணித்து கொண்டிருக்கும் திசையை அறிவிக்கும் அபாய ஒலியாகும் என்று அவர் கூறியுள்ளார்.


Tags : Chidambaram ,collapse ,Democratic , Democracy List, Decline, India, Risk, P Chidambaram, Warning
× RELATED சிதம்பரம் நடராஜர் கோயிலில் மேற்கொள்ள...