×

தமிழக இளைஞர் காங்கிரஸ் சார்பில் நேதாஜி பிறந்த நாள் விழா

சென்னை: தமிழக இளைஞர் காங்கிரஸ் சார்பில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் விழா, அவர் 1939ம் ஆண்டு வந்து சென்ற ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகே உள்ள காந்தி பீக் இல்லம் முன்பு நேற்று நடைபெற்றது. தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஹசன் மவுலானா தலைமை வகித்தார். அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ஜெபி மேத்தர், சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிவ ராஜேசேகரன் முன்னிலை வகித்தனர். இதில் மாநில துணை தலைவர் பிரபுதாஸ் மற்றும் நிர்வாகிகள் ரஹ்மான், சாதிக், தினேஷ், ராமதாஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர். விழாவில் வேலையில்லா திண்டாட்டத்தால் இளைஞர்கள் படும்பாட்டை நாடகமாக நடத்தி காட்டி, பாஜ அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Tags : birthday ,Netaji ,Tamilnadu Youth Congress Tamilnadu Youth Congress , Netaji birthday ,Tamilnadu Youth Congress
× RELATED மதுரை நேதாஜி சாலையில் உள்துறை...