×

கொளத்தூர் எவர்வின் பள்ளியில் சாலை பாதுகாப்பு வார விழா

பெரம்பூர்: 31வது சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி கொளத்தூர் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் கொளத்தூர் எவர்வின் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியருக்கு சாலை பாதுகாப்பு  குறித்த விழிப்புணர்வு  நடைபெற்றது.
இதனை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் அசோக்குமார், வடக்கு வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் வி. ஆனந்தன் எஸ். ரமேஷ் ஆகியோர்  கலந்துகொண்டு ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்தும் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்க கூடாது எனவும் கண்டிப்பாக 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் உரிமம் பெற்ற பின்னரே வாகனத்தை இயக்க வேண்டும் எனவும்  விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில் எவர்வின் பள்ளியின் ஆசிரியைகள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

Tags : Kolathur ,Everwin School ,Road Safety Week , Everwin School, Road Safety Week
× RELATED கொளத்தூர் தொகுதி அதிமுக ஆலோசனை...