×

கோடம்பாக்கம், ஆலந்தூர் பகுதிகளில் 72.76 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் பறிமுதல்: 19.45 லட்சம் அபராதம் வசூல்

சென்னை: மாநகராட்சிக்கு உட்பட்ட கோடம்பாக்கம், ஆலந்தூர் மண்டல பகுதிகளில் 72.76 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டு 19.45 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் தடைசெய்யப்பட்டு அதன் அலுவலர்களால் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டும், பல்வேறு வகையான நடவடிக்கைகள் மூலம் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, கோடம்பாக்கம் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் மண்டல அலுவலர், மண்டல நல அலுவலர் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள், துப்புரவு அலுவலர்கள் ஆகியோர் இணைந்து மூன்று தனிக்குழுக்கள் அமைத்து, தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து அனைத்து வணிக நிறுவனங்கள், உணவு விடுதிகள்,

சாலையோர கடைகள் ஆகியவற்றில் தமிழக அரசால் நெகிழிகள் பயன்பாடு தடை செய்யப்பட்ட 2019 ஜனவரி 1ம் தேதி முதல் 22ம் தேதி வரை 41,206 வணிக நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்திய நிறுவனங்களுக்கு 11,28,400 அபராதம் விதிக்கப்பட்டு, 61.15 மெட்ரிக் டன் வரையிலான தடை செய்யப்பட்ட  பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது. இதேபோல், ஆலந்தூர் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 20,423 வணிக நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டு, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்திய நிறுவனங்களுக்கு 8,16,700 அபராதம் விதிக்கப்பட்டு, 11.61 மெட்ரிக் டன் வரையிலான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.  சென்னை மாநகராட்சி கோடம்பாக்கம் மற்றும் ஆலந்தூர் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் 2019 ஜனவரி 1ம் தேதி முதல் 22ம் தேதி வரை 72.76 மெட்ரிக்டன் வரையிலான பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டு, 19.45 லட்சம் அபராதமும் வசூலிக்கப்பட்டுள்ளது.

Tags : areas ,Kodambakkam ,Alandur , Kodambakkam, Alandur, metric tons of plastic, fine
× RELATED கோடம்பாக்கத்தில் வீட்டின் முன்...