×

சென்னை - மதுரை இடையே இயக்கப்படும் தேஜஸ் ரயிலில் வீடியோ வசதி : தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை : தேஜஸ் விரைவு ரயிலில் புதிய பொழுதுபோக்கு வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை - மதுரை இடையே தேஜஸ் அதிவேக விரைவு ரயில் இயக்கப்படுகிறது. வியாழக்கிழமை தவிர்த்து அனைத்து நாட்களிலும் இந்த ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ரயிலில் புதிய பொழுதுபோக்கு வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  “மேஜிக் பாக்ஸ்” என்ற இந்த வசதி வைஃபை மூலம் இயங்கும். இதன் மூலம் பயணிகள் 500 மணி நேரம் பல்வேறு வகையான வீடியோக்களை கண்டுகளிக்கலாம். இதில் ஏற்கனவே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள படங்கள், குழந்தைகளுக்கான வீடியோக்கள், அரசு திட்டங்கள் தொடர்பான வீடியோக்களை பார்க்கலாம்.

Tags : Chennai ,Tejas ,Madurai ,Southern Railway , Video feature, Tejas train running,Chennai and Madurai, Southern Railway announces
× RELATED சென்னையில் விமான டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்வு