×

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் ஆவின் ஏஜென்டுகள் கொள்முதல் செய்யும் பொருட்களுக்கு வங்கியில் பணம் செலுத்தும் வசதி

வேலூர்: ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் ஆவின் ஏஜென்டுகள் கொள்முதல் செய்யும் பொருட்களுக்கு வங்கியில் பணம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் ஆவின் மூலம் தினமும் ₹1.30 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில் 8ஆயிரம் லிட்டர் பால் திருவண்ணாமலைக்கும், மீதமுள்ள பால் சென்னைக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் பால், தயிர், பால்கோவா, நெய் உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கப்பட்டு ஏஜென்டுகள் மூலமாக பஸ் நிலையங்கள், ரயில்நிலையங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் பாலகங்கள் அமைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

இதில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 300 ஏஜென்டுகள் உள்ளனர். இவர்கள் கொள்முதல் செய்யும் பாலுக்கான தொகையினை 6 மண்டல அலுவலகங்களில் நேரடியாக செலுத்தி வருகின்றனர். தற்போது பெரும்பாலான அலுவலகங்களில் பண பரிவர்த்தனைகள் ஆன்லைன் மூலமாக நடைபெற்று வருகிறது. அதேபோல் ஆவின் ஏஜென்டுகள் பால் கொள்முதல் செய்த பணத்தை இனிவரும் காலங்களில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் செலுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் ஆவின் ஏஜென்டுகள் இதனை பயன்படுத்திக்கொள்ள ஏற்பாடு செய்யப்படும் என்று ஆவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : agents ,district ,Aevin ,Vellore , Vellore, Avin Agent, Bank
× RELATED திருவள்ளூர் சட்டமன்ற...