×

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையுடன் தொடர்புடைய அடிதடி வழக்கை கைவிடுவதாக கோவை நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை

கோவை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்குடன் தொடர்புடைய அடிதடி வழக்கை கைவிடுவதாக கோவை நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து ஆபாச வீடியோ எடுத்து அதன் அடிப்படையில் அந்த பெண்களை மிரட்டி பணம் பறித்ததாக, புகார் அளித்த பெண்ணின் சகோதரரை வழக்கில் தொடர்புடையவர்கள் தாக்கியுள்ளனர். இது தொடர்பாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 6ம் தேதி ஒரு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கிற்கு முன்னதாக தான் அந்த பாதிக்கப்பட்ட பெண், ஆபாச வீடியோ எடுத்தது சம்பந்தமாக புகார் அளித்திருந்தார். எப்படி நீங்கள் புகார் அளிக்கலாம்? என்று கூறி பாலியல் வழக்கில் தொடர்புடையவர்கள் பெண்ணின் சகோதரரை தாக்கியதாக தான் வழக்கு பதியப்பட்டது. இந்த இரு வழக்குகளையும் சிபிஐ விசாரித்து வந்தது. இந்நிலையில், அந்த அடிதடி வழக்கில் மட்டும் எந்தவித ஆதாரமும் இல்லை.

ஆதலால் மேல்நடவடிக்கையை கைவிடுவதாக தற்போது சிபிஐ கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதனை தொடர்ந்து, இந்த வழக்கானது வருகின்ற 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் இன்னும் கூடுதல் தகவல்களும், வழக்கின் இறுதி விசாரணையும் நடைபெற வாய்ப்புள்ளது. இதனையடுத்து, பாலியல் வன்கொடுமை வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் ஒருவரான மணிவண்ணன் என்பவர் பொள்ளாச்சி பாலியல் வழக்கிலும் தொடர்பிருப்பதால் அவர் தற்போது சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை தவிர மீதமுள்ள 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்ட ஒரு மாதத்திலேயே பிணையில் வெளிவந்துள்ளனர். தற்போது இந்த வழக்கில் 6 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒருவர் மட்டும் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சேர்க்கப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Pollachi ,Coimbatore ,court ,CBI ,sexual assault , Pollachi, Sexual Harassment, Addiction Case, Coimbatore Court, CBI Report
× RELATED பொள்ளாச்சியில் ஓய்வுபெற்ற பெண் கும்கி யானை உயிரிழப்பு..!!