×

பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்திய சூப்பர் மார்க்கெட்டுக்கு ரூ.25,000 அபராதம்: பேரூராட்சி அதிரடி நடவடிக்கை

முத்துப்பேட்டை: முத்துப்பேட்டையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய சூப்பர் மார்க்கெட்டுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து பேரூராட்சி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.முத்துப்பேட்டை பேரூராட்சிக்குடப்பட்ட பகுதியில் சமீபகாலமாக அதிகளவில் குப்பைகள் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகளவில் சேர்ந்து ஆங்காங்கே குவிந்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வந்தது. இதில் பேரூராட்சி நிர்வாகம் துப்புரவு பணியாளர்களை கொண்டு அகற்றினாலும் மீண்டும் மீண்டும் சாலை தெருக்களில் பொதுமக்கள், வியாபாரிகள் குப்பைகள் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டி வந்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் பொறுப்பேற்ற செயல் அலுவலர் தேவராஜ் வியாபாரிகளை அழைத்து கூட்டம் நடத்தி முத்துப்பேட்டையில் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் நகரில் குப்பைகள் இல்லாத நகரமாக உருவாக்க பேரூராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது, ஆகையால் வியாபாரிகள் தாங்கள் பிளாஸ்டிக் பைகள் பொருட்களை வைத்துக்கொள்ள வேண்டாம் என்றார். அதேபோல் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்கள் மத்தியில் அறிவிப்பும் செயப்பட்டது. இருந்தும் யாரும் கண்டுக்கொள்ளவில்லை.இந்தநிலையில் நேற்று முத்துப்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலர் தேவராஜ் தலைமையில் சுகாதார மேற்பார்வையாளர்கள் வீரமணி, கார்த்திக் மற்றும் பணியாளர்கள் திருத்துறைப்பூண்டி சாலையில் கடைகளில் அதிரடி சோதனை செய்தனர். இதில் ஒரு பல்பொருள் கடையில் அதிகளவில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் வகை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து அங்கிருந்த பிளாஸ்டிக் வகை பொருட்கள் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அதேபோல் அப்பகுதியில் இருந்த மேலும் 4 கடைகளில் சோதனை செய்யப்பட்டு, தலா 2ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டு மொத்தம் 33ஆயிரம் வசூல் செய்யப்பட்டது. இதனால் வியாபாரிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் 4 கடைகளில் சோதனை செய்யப்பட்டு, தலா 2ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டு மொத்தம் 33ஆயிரம் வசூல் செய்யப்பட்டது.

Tags : Supermarket , plastic bags, Penalty, Supermarket,
× RELATED இஸ்ரேல் – ஹமாஸ் போர் விவகாரம்:...