×

இந்தியா, சீனா ஆகிய‌ நாடுகளைப்போல அமெரிக்கா வளர்ந்து வரும் நாடு தான்: அமெரிக்க அதிபர் டிரம்ப்

சுவிட்சர்லாந்து: சுவிட்சர்லாந்தில் நடந்து வரும் உலகப் பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் இந்தியா மற்றும் சீனா ஆகிய‌ நாடுகளைப்போல அமெரிக்கா வளர்ந்து வரும் நாடு தான் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியுள்ளார்.  சர்வதேச வர்த்தக அமைப்பை பொருத்தவரையில் இந்தியாவும், சீனாவும் வளர்ந்து வரும் நாடுகளாக கருதப்படும் நிலையில் அமெரிக்காவும்  வளர்ந்து வரும் நாடு தான் என்று கருதப்பட வேண்டும் என டிரம்ப் கூறியுள்ளார்.

மேலும் சீனா மற்றும் இந்தியா இரு நாடுகளும் வளர்ந்து வரும் நாடுகளாக கருதப்படுவதால் உலக வர்த்தகத்தில் அதிக சலுகைகளைப் பெறுகின்றன எனவும் ட்ரம்ப் கூறியுள்ளார். இந்தியாவும் சீனாவும் வளர்ந்து வரும் நாடுகளாக கருதப்படக்கூடாது, ஆனால் அவ்விரு நாடுகளும் கருதப்படும்போது அமெரிக்காவும் வளர்ந்து வரும் நாடாகவே கருதப்பட வேண்டும் என ட்ரம்ப் சர்ச்சையை கிளப்பியுள்ளார். அடுத்த மாதம் ட்ரம்ப் இந்திய சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் அவர் இவ்வாறு பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : US ,Donald Trump ,India ,America ,China , US like India, China , US, growing, country , US , President Trump
× RELATED இந்தியா-சீனா இடையிலான எல்லை...