×

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை தரிசனத்தின்போது 263 கோடி ரூபாய் வருமானம்: சென்ற ஆண்டை விட அதிகம்

தென்மலை: சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை தரிசனத்தின்போது 263 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது. ஆண்டுதோறும் சபரிமலை ஐயப்பன் கோவிலில் கார்த்திகை 1 ஆம் தேதி முதல் 60 நாட்களுக்கு மகர பூஜை மற்றும் மண்டல விளக்குப் பூஜைக்காக நடை திறக்கப்படும்.கார்த்திகை பூஜையின் சிகர நிகழ்ச்சியான மண்டல பூஜை டிசம்பர் மாதம் 27-ந் தேதியும், மகர விளக்குப் பூஜை ஜனவரி 6-ந் தேதியும் நடைபெற்றது.

இதற்காகக் கடந்த செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. நடை திறக்கப்பட்டதிலிருந்து  தினமும் ஆயிரக் கணக்கான மக்கள் மாலைபோட்டு விரதம் இருந்து ஐயப்பனைத்  தரிசித்து வந்தனர். பூஜைகளை முன்னிட்டு, ஐயப்பன் கோவிலிலிருந்து சுமார் 40 கி.மீ தூரம் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நாளுக்கு நாள் சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வந்ததால். கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு கோவில் வருமானம் அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டு நடை  திறந்து 28 நாட்களிலேயே கோவிலின் வருமானம் ரூபாய் 100 கோடியை எட்டியது. கடந்த நவம்பர் 16ந் தேதி திறக்கப்பட்ட ஐயப்பன் கோவில் நடை செவ்வாய்க்கிழமை அதிகாலை சாத்தப்பட்டது. இரண்டு மாதங்களில் கோவிலுக்கு வந்த பக்தர்கள் மூலம் 263 கோடியே 46 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் கிடைத்ததைவிட நடப்பாண்டில் 95 கோடியே 35 லட்சம் ரூபாய் அதிகம் கிடைத்துள்ளது.

Tags : Mandala Pooja ,Sabarimalai Iyyappan Temple ,Mandala Pooja Darshan , Sabarimalai, Iyappan temple, mandala pooja, income
× RELATED சபரிமலையில் நாளை நடைபெறும் மண்டல பூஜை...