×

கிரண்பேடிக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறையில் இருந்து மிரட்டியவருக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பா?

புதுச்சேரி: புதுவையில் கவர்னர் கிரண்பேடிக்கு மிரட்டல் விடுத்தவருக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசுக்கு எழுந்துள்ள நிலையில் அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.  புதுவையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கவர்னர் மாளிகை மற்றும் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வெடிகுண்டு நிபுணர்கள் நடத்திய சோதனையில் அது புரளி என தெரியவந்தது. அதன்பிறகு போலீசார் விசாரணை நடத்தியதில் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த டெல்லியைச் சேர்ந்த நித்திஷ்குமார் ஷர்மா மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர் மீது 507 பிரிவின்கீழ் காவல்துறை வழக்குபதிவு செய்தது.  இதனிடையே கவர்னர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த டெல்லி வாலிபரை சக கைதிகள் சரமாரி அடித்து உதைத்தனர். இதில் காயமடைந்த அவர் 8 கைதிகள் மீது காலாப்பட்டு போலீசில் நேற்று முன்தினம் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர். எனினும், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நித்திஷ்குமார் ஷர்மாவை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை தலைமை உத்தரவிட்டது. இதன்பேரில், புதுச்சேரி நீதிமன்றத்தில் பெரியகடை போலீசார் மனு அளித்துள்ளனர்.  இம்மனுவை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு காவல் விசாரணைக்கு அனுமதி அளிக்கும் பட்சத்தில் உடனடியாக அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். குடியரசு தினம் நெருங்கியுள்ள நேரத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்த அவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இருப்பதால் பயங்கரவாதிகளுடன் அவருக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட உள்ளது.

Tags : Grenade ,prisoner , Grenade, bomb threat, jail
× RELATED ‘மலையாள நாடகத்தை ஒளிபரப்பு..’ கைதி...