×

ஒரே நாளில் மேலும் 5 பேர் உயிரிழப்பு சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் பலி 17 ஆக உயர்வு

பிஜீங்: சீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் காய்ச்சலால் 440 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் கொரோனா வைரஸ் எனப்படும் புதிய வைரஸ் காய்ச்சல் கடந்த சில நாட்களாக பரவி வருகிறது. மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் இந்த வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் வரை 4 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், பலி  எண்ணிக்கை நேற்று அதிகரித்துள்ளது. இந்த காய்ச்சல் தாக்கியவர்கள் இருமல், கடுமையான சுவாச பிரச்னையால் பாதிக்கப்பட்டு உயிரிழக்க நேரிடுகிறது.  நேற்று முன்தினம் வரை 13 மகாணங்களை சேர்ந்த 440 பேர் கொரோனா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.  இவர்களுக்கு தொடர்ந்து சிகிசிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இது தொடர்பாக தேசிய சுகாதார ஆணையத்தின் துணை இயக்குனர் லீ பின் கூறுகையில், “கடந்த செவ்வாயன்று மட்டும் கொரோனா வைரஸ் காய்ச்சலால் புதிதாக பாதிக்கப்பட்ட 149 பேர் கண்டறியப்பட்டனர். காய்ச்சல் பாதித்த 17 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இறந்தவர்கள்  அனைவரும் ஹூபெய் மாகாணத்தை சேர்ந்தவர்கள்,” என்றார். கொரோனா வைரஸ் காய்ச்சலால் ஜப்பானில் ஒருவரும், தாய்லாந்தில் மூன்று பேரும், கொரியாவில் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல், அமெரிக்காவிலும் ஒருவருக்கு இந்த வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இவர் சீனாவின் யுஹான் நகரில் இருந்து அமெரிக்கா வந்ததாக தெரிகிறது. சீனாவின் இந்த நகரில்தான் முதல் முதலில் இந்த வைரஸ் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Tags : China , China death ,toll rises , 17 , China overnight
× RELATED சீனா, தாய்லாந்தில் இருந்து வரும் வெஸ்டர்ன் ஃப்ராக்ஸ்