மும்பையில் 24 மணி நேரமும் வணிக நிறுவனங்கள் திறந்திருக்க அனுமதி

மும்பை: பெருநகரங்களில் ஒன்றான மும்பையில், மக்கள் நடமாட்டம் எப்போதும் இருக்கும். இது சுற்றுலா தளம் என்பதால், ஏராளமானவர்கள் அந்நகருக்கு வருகின்றனர். இந்நிலையில், நகரில் மல்டிபிளெக்ஸ் தியேட்டர்கள், கடைகள், உணவகங்கள் மற்றும் மால்களை 24 மணி நேரமும் திறந்து வைக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், மாநிலத்தில் புதிதாக ஆட்சிப்பொறுப்பு ஏற்ற சிவசேனா கூட்டணி இந்த கோரிக்கையை பரிசீலிப்போம் என்று தெரிவித்திருந்தது. இதன்படி நேற்று முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் கூடிய மாநில அமைச்சரவை, இத்திட்டத்துக்கு அனுமதி அளித்தது. இதையடுத்து, இனி 24 மணி நேரமும் மும்பை வணிக நிறுவனங்கள், கடைகள் என அனைத்தும் திறந்து வைக்க முடியும். எனினும், இது கட்டாயம் இல்லை.

Tags : Businesses ,Mumbai , Businesses are open ,24 hours, Mumbai
× RELATED டெல்லியில் மீண்டும் வன்முறை...