×

சென்னை அரசு அருங்காட்சியகத்தில் கீழடி தொல்பொருளை வைக்க சிறப்பு ஏற்பாடு: தமிழக அரசு தகவல்

சென்னை: கீழடி அகழாய்வு குறித்த மாதிரிகள் சென்னை அரசு அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சிவகங்கை மாவட்டம், கீழடியில் வெளிக்கொணரப்பட்ட தொல்பொருட்கள் சென்னையில் கடந்த ஜனவரி 9 முதல் 21 வரை நடந்த 43வது சென்னை புத்தகக்காட்சியில் வைக்கப்பட்டன. இதை 12 நாட்கள் நடந்த புத்தகக் காட்சிக்கு வந்திருந்த லட்சக்கணக்கான பொதுமக்கள் பார்வையிட்டு பாராட்டினர். மேலும், கீழடி அகழாய்வு நூல் 23,000 பிரதிகளுக்கு மேல் விற்பனை செய்யப்பட்டு சாதனை புரிந்துள்ளது.

கீழடி ஆய்வறிக்கை குறித்த நூல்கள் தமிழ்நாடு அரசு பாடநூல் நிறுவன வளாகம், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சென்னை தலைமை அலுவலகம் மற்றும் சார் அலுவலகங்கள், மதுரை உலகத் தமிழ் சங்கம், மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை ஆகிய இடங்களில் தொடர்ந்து விற்பனை செய்யப்படும். மேலும், கண்காட்சியில் இடம்பெற்ற கீழடி அகழாய்வு குறித்த மாதிரிகள் சென்னை அரசு அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வையிடுவதற்காக விரைவில் காட்சிப்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Government Museum ,museum ,Chennai ,Chennai Special Arrangement to Keep in Archaeological Museum , Chennai, Government Museum, Khadi, Special Organization, Government of Tamil Nadu, Information
× RELATED விடுதலைப் போராட்டத்தில்...