×

அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி வழங்க முடியாமல் இலவச பயிற்சி மையங்கள் திணறுவதாக குற்றச்சாட்டு

சென்னை: தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி வழங்க முடியாமல் 421 இலவச பயிற்சி மையங்கள் திணறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு speed என்ற நிறுவனத்தின் மூலம் நீட் தேர்வு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டுக்கான நீட் பயிற்சி மையங்கள் தாமதமாக தொடங்கியதால் இது வரை 30-க்கும் குறைவான வகுப்புகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனிடையே ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்;.. தேர்தல் மற்றும் தொடர் விடுமுறை காரணமாக நீட் பயிற்சி மையங்கள் இயங்கவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார். மேலும் நீட் பயிற்சி மையங்கள் விரைவில் தொடங்கப்படும் என்று அவர் தெரிவித்து உள்ளார்.

தேர்வுக்கு இன்றும் மூன்று மாதங்களே உள்ள நிலையில் நீட் பயிற்சி மையங்கள் செயல்படாததால் அரசு பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கல்வியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே நீட் பயிற்சி மையங்களை உடனடியாக திறக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகும்.


Tags : government schools ,Government students , alleged, government ,schools, training,students
× RELATED அரசு பள்ளி, சமூக நலக்கூடங்களில் வடமாநில மக்களை தங்கவைக்க எதிர்ப்பு