×

வெம்பக்கோட்டை பகுதியில் கை கொடுத்த மானாவாரி பருத்தி: விளைச்சல் அமோகம் விவசாயிகள் மகிழ்ச்சி

சிவகாசி: வெம்பக்கோட்டை பகுதியில் மானாவாரி சாகுபடியில் பருத்தி, அமோகமாக விளைந்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வெம்பக்கோட்டை வட்டாரத்தில் 8 ஆயிரம் ஹெக்டேர் மானாவாரி நிலங்கள் உள்ளன. இப்பகுதியில் போதிய மழை இல்லாமல், விவசாயப் பணிகள் மந்த கதியில் நடந்து வந்தன. குறுகிய காலப் பயிர்களான சோளம், கம்பு ஆகியவை மட்டுமே பயிரிட்டனர். இதனால், போதிய வருவாய் இல்லாமல் விவசாயிகள் கவலைப்பட்டனர். இந்நிலையில், இந்தாண்டு வடகிழக்கு பருவமழை ஆரம்ப முதலே பரவலாக பெய்து வந்தது. இதையடுத்து, வெம்பக்கோட்டை வட்டார பகுதி விவசாயிகள், மனாவாரி நிலங்களில் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பில் பருத்தி சாகுபடி செய்தனர். கடந்த 3 மாதங்களில் பருத்தி செடிகள் நன்கு வளர்ந்து அடைந்து, தற்போது காய்கள் வெடித்து பஞ்சு வெளிப்பட்டுள்ளது. குறுகிய கால பயிர் என்பதால் ஏராளமான விவசாயிகள் பருத்தி பயிரிட்டிருந்தனர். பருவமழையும் அவ்வப்போது பெய்ததால் பருத்தி விளைச்சல் அமோகமாக விளைந்துள்ளது. தற்போது விவசாயிகள் பருத்திச் செடியில் இருந்து வெடித்துள்ள பஞசுகளை பிரிந்து எடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பஞசுகளுக்கு நல்ல விளை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்து குகன்பாறை கிராமத்தை சேர்ந்த விவசாயி மலையரசன் கூறுகையில், ‘மானாவாரி நிலங்களில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பருத்தி பயிரிட்டோம். பருவமழை பரவலாக பெய்து வந்ததால் பருத்தி செடிகள் நல்ல விளைச்சல் அடைந்துள்ளது. ஒரு சில நிலங்களில் மட்டுமே பனி மூட்டம் காரணமாக விளைச்சல் பாதிப்படைந்துள்ளது. தற்போது காய்களில் வெடித்துள்ள பஞ்சுகளை பிரித்து எடுத்து வருகிறோம். அடர்த்தி அதிகமான பஞ்சுகளுக்கு நல்ல விலை கிடைப்பதால் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். கடந்த பல ஆண்டுகளுக்கு பிறகு மனாவாரி பருத்தி அதிக லாபத்தை கொடுத்துள்ளது. இதனால், மகிழ்ச்சியில் உள்ளோம்’ என்றார்.

Tags : area ,Vembakkottai , Vembakkottai, handmade, rain cotton
× RELATED வாட்டி வதைக்கும்...