×

தாராபுரத்தில் சாலை விபத்து விழிப்புணர்வு நாடகம்...:பாசக்கயிறு வீசி விபத்துக்குள்ளாக்கிய எமதர்மர்

தாராபுரம்: தாராபுரத்தில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு தத்துருவமாக சாலை விபத்து நாடகம் நடத்தப்பட்டது. அண்ணா சாலை அருகே 31-வது சாலை பாதுகாப்பு வார விழா நடைபெற்றது. அப்போது எமதர்மர் போல வேடம் அணிந்த நபர் தலைக்கவசம் அணியாமல் வருபவர்களை தனது பாசக்கயிற்றை வீசி அவர்களை விபத்துக்குள்ளாக்கி உயிரை பறிப்பது போன்ற நாடகம் நடத்தப்பட்டது.

தத்துருவமாக நடத்தப்பட்ட சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு நாடகம் பொதுமக்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது. இந்த நாடகம் மூலம் தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை தாங்கள் அதிகமாக உணர்ந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.


Tags : Dharapuram , Road accident, awareness, drama, Tarapuram ...
× RELATED விரிவாக்க பணிகளுக்காக நோட்டீஸ்...