×

மசூதிகள் குறித்து பாஜ எம்எல்ஏ சர்ச்சை பேச்சு: எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்

பெங்களூரு: மசூதிகள் குறித்து கர்நாடக பாஜ எம்எல்ஏ  ரேணுகாச்சார்யா சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசி உள்ளார். அவருக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. கர்நாடக  மாநிலம் தாவணகெரே நகரில் நேற்று குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக  பாஜ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில்  கலந்துக் கொண்டு பேசிய பாஜ எம்எல்ஏ ரேணுகாச்சார்யா,   ‘‘இஸ்லாமியர்கள்  மசூதிகளை ஆயுதங்கள் பதுக்க மட்டுமே பயன்படுத்துகிறார்கள்,  அவர்களுக்கு இனிமேல் ஒரு ரூபாய் நிதி கூட கொடுக்க முடியாது. மசூதியில் தொழுகை  நடக்கிறதா? மசூதியை வைத்துக்கொண்டு ஆயுதங்களை சேகரித்துக் கொண்டு  இருக்கிறீர்களா?’’ என்று பேசினார்.

பொது இடத்தில் ஒரு மதத்தினரின் வழிபாட்டு இடம் குறித்து அவதூறு கிளப்பும் வகையில் பாஜ எம்எல்ஏ பேசியது கடும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. அவருக்கு காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம், கம்யூனிஸ்ட் கட்சிகள் என்று பல்வேறு கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி யுள்ளனர்.


Tags : Baja MLA ,Opposition parties ,Bjp ,MLA , Mosques, Bjp MLA, Opposition parties
× RELATED ரஷ்ய அதிபர் தேர்தலில் புடின் மீண்டும்...