உபர் ஈட்ஸ் இனி இல்லை: சொமாட்டோ கைக்கு மாற்றம்

புதுடெல்லி: உபர் ஈட்ஸ் இந்தியா நிறுவனத்தை ரூ. 2500 கோடிக்கு சொமாட்டோ நிறுவனம் வாங்கி விட்டது; இனி உபர்ஈட்ஸ் பெயரில் உணவு டெலிவரி இருக்காது; சொமாட்டோ ஆப் மூலம் தான் உணவு டெலிவரி கிடைக்கும். இந்தியாவில் ஓட்டல் உணவுப்பண்டங்களை வீட்டுக்கே டெலிவரி செய்யும் பிசினசை சொமாட்டோ, ஸ்விக்கி ஆகிய நிறுவனங்கள் செய்து வந்தன. வாடகை டாக்சி பிசினஸ் செய்யும் உபர் நிறுவனமும், உபர் ஈட்ஸ் பெயரில் உணவு டெலிவரி செய்து வருகிறது. மூன்று நிறுவனங்களும் ஆன்லைன் ஆப்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு உணவு டெலிவரி வர்த்தகத்தை நடத்தி வந்தன. இந்திய உணவு டெலிவரி சந்தையில், சொமாட்டோ நிறுவனத்துக்கு 52 சதவீதமும், ஸ்விக்கிக்கு 43 சதவீதமும் உள்ளது. உபர் ஈட்ஸ்க்கு பெரிய அளவில் சந்தை இல்லை. சமீபத்தில் ஸ்விக்கி வெளியிட்ட அறிக்கையில், எங்களுக்கு சந்தையில் 60 சதவீதம் வர்த்தகம் உள்ளது என்று குறிப்பிட்டிருந்தது.

இதையடுத்து, சொமாட்டோ நிறுவனம், உணவு டெலிவரி சந்தையை கைப்பற்ற திட்டமிட்டது. உபர் ஈட்ஸ் இண்டியா நிறுவனத்தை விலைக்கு சொமாட்டோ நிறுவனம் முடிவு செய்து பேச்சு நடத்தியது. உபர் ஈட்ஸ் இண்டியா நிறுவனத்தை 2500 கோடி ரூபாய்க்கு வாங்க ஒப்பந்தம் போடப்பட்டது. உபர் ஈட்ஸ் 9.99 சதவீத பங்குகளை மட்டும் தன்வசம் வைத்துக்கொண்டுள்ளது. உபர் ஈட்ஸ் நிறுவனம் நாடு முழுவதும் 600 நகரங்களில் உணவு டெலிவரி செய்து வருகிறது. நேற்று முதல் இந்த நகரங்களில் சொமாட்டோ நிறுவனம் தான் உணவு டெலிவரி செய்யும். இனி உபர்  ஈட்ஸ் ஆப் செயல்படாது; அதில் நுழைந்தால் சொமாட்டோ ஆப்சுக்கு மாறி விடும்.

Related Stories:

>