×

ரிசர்வ் வங்கி அறிக்கையில் பில்லியன் இருக்காது இனி கோடிகள் தான்

மும்பை: ரிசர்வ் வங்கி தனது வரவு-செலவு அறிக்கை, வருவாய் அறிக்கை ஆகியவற்றில், எண்களை குறிக்கும்போது பில்லியன் என்பது பயன்படுத்தப்பட்டது. இனிமேல் அதற்கு பதிலாக கோடிகளில் குறிப்பிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கை: மத்திய ரிசர்வ் வங்கி இயக்குநர்கள் கூட்டம் பஞ்சாப் தலைநகர் சண்டிகரில் கடந்த அக்டோபர் 11ம் தேதி நடைபெற்றது. ரிசர்வ் அறிக்கைகளில் எண்ணிக்கைகள் பில்லியனில் குறிப்பிடப்பட்டு வந்தன. அவற்றை இனி கோடிகளில் குறிப்பிடுவது என இதில் முடிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தவும், அடுத்த இயக்குநர்கள் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் பெறப்பட்டு இயக்குநர் குழு தலைவர் கையொப்பம் பெறவும் முடிவு செய்யப்பட்டதால் அது பற்றிய தகவலை வெளியிட்டுள்ளது. இந்த மாற்றத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் தர வேண்டும்.

மேலும், இந்த கூட்டத்தில் நாட்டின் பொருளாதார முன்னேற்றம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. ஆட்டோமொபைல், ரியல் எஸ்டேட், இரும்பு எஃகு மற்றும் எரிசக்தி தொழில், சாலை போக்குவரத்து தொழில் துறைகளின் வளர்ச்சிக்கு அரசு மற்றும் சம்மந்தப்பட்ட துறையினர் தொடர்ந்து சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அப்போதுதான் நிலைமையில் முன்னேற்றம் காண முடியும் என்று இயக்குநர் ஒருவர் இந்த கூட்டத்தில் சமர்ப்பித்த தனது அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளார். மோசடிகள் அதிகரிப்பு மற்றும் வராக்கடன் சுமை போன்றவற்றை கட்டுப்படுத்த வர்த்தக மற்றும் கூட்டுறவு துறை வங்கிகளின் செயல்பாடுகளை நெறிபடுத்தி கண்காணிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. பிஎம்சி  வங்கி மோசடி குறித்தும் விவாதிக்கப்பட்டது. மோசடிகளை தடுத்து  வங்கி வளர்ச்சிக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றியும் அதிகாரிகள் கூட்டத்தில் எடுத்துரைத்தனர் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது,

Tags : RBI , Billions of rupees , RBI report , no more
× RELATED 2047ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த...