×

தமிழ் மற்றும் சமஸ்கிருத முறைப்படி தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு: ஐகோர்ட் கிளையில் தகவல்

மதுரை:  தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழா தமிழ் மற்றும் சமஸ்கிருத முறைப்படி நடக்கும் என ஐகோர்ட் கிளையில் தெரிவிக்கப்பட்டது.  ராமநாதபுரம், மோர்பண்ணையைச் சேர்ந்த வக்கீல் திருமுருகன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தஞ்சை பெருவுடையார் (பெரிய) கோயில்  என்றழைக்கப்படும் பிரகதீஸ்வரர் கோயில் யுனெஸ்கோவால் பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப்பட்டது. தொன்மையான இந்த ஆலயத்தில் வரும் பிப்.5ம் தேதி குடமுழுக்கு விழா நடக்கிறது. சைவ சமய நெறிப்படி அமைக்கப்பட்ட இந்த ேகாயிலில் கடந்த 1997ல் பிரதிஷ்டை விழா நடந்தது. சமஸ்கிருத மொழியில் நடத்தப்பட்டதால் அப்போது பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில், 48 பேர் பலியாகினர். அதன்பிறகு எந்தவொரு நிகழ்வும் நடத்தப்படவில்லை. எனவே, பிப்.5ல் நடக்கும் குடமுழுக்கு விழாவை தமிழ் முறைப்படி நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.துரைச்சுவாமி, டி.ரவீந்திரன் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.  அப்போது தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் தரப்பில், குடமுழுக்கு விழா, சிவாலயங்களில் வழக்கமாக நடக்கும் யாகசாலை பூஜை முறைப்படி நடத்தப்படும். மங்கள இசை, வேத பாராயணம், திருமுறை பாராயணம், திரவியாகுதி, பூர்ணாகுதி, தூப, தீப, ைநவேத்தியம், சிவ ஆகம சமர்ப்பணம், பன்னிருதிருமுறை பாராயணம், ஆசிர்வாதம், வாழ்த்து உள்ளிட்டவை 166 ஓதுவார்கள் மூலம் நடத்தப்படும். குடமுழுக்கு விழா தமிழ் மற்றும் சமஸ்கிருத முறைப்படி நடத்தப்படும் என கூறப்பட்டது.  இதையடுத்து தேவஸ்தான நிர்வாகத்தை ஒரு தரப்பாக சேர்க்க மனுதாரர் தரப்புக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், விசாரணையை ஜன.27க்கு தள்ளி வைத்தனர்

Tags : Thanjavai Temple Temple Kuttamukku ,Sanskrit Method Thanjavai Temple Kuttamukku , Tamil, Sanskrit, Tanjore Big Temple, Icort Branch
× RELATED யானை தாக்கி விவசாயி பலி