நாடு முழுவதும் ஜூன் 1 முதல் ஒரே ரேஷன் அட்டை அமல்: பஸ்வான் அறிவிப்பு

பாட்னா: ‘‘ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை திட்டம் நாடு முழுவதும் வரும் ஜூன் 1ம் தேதி அமல்படுத்தப்படும்’’ என்று மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் அறிவித்துள்ளார். வேலை நிமித்தமாக ஒரு மாநிலத்திலிருந்து வேறு மாநிலத்திற்கு செல்லும் மக்கள் ரேஷன் பொருட்களை வாங்க முடியாத நிலை உள்ளது.  இதை மாற்ற, ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதன் மூலம், இந்தியா முழுவதும் எங்கே வேண்டுமானாலும் ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ள முடியும். முதலில் ஜூன் 30ம் தேதி நாடு முழுவதும் இத்திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த 1ம் தேதி புத்தாண்டு தினத்தில் ஆந்திரா, அரியானா, கர்நாடகம், கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தெலங்கானா, குஜராத், திரிபுரா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தது. இந்நிலையில், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் ஜூன் 1 முதல் இந்த திட்டம் அமல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் பஸ்வான் அறிவித்துள்ளார். இதன்மூலம் நாடு முழுவதும் 81 கோடி பேர் பயன்பெறுவார்கள்.
Tags : Paswan , The only ration card, Baswan
× RELATED காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை ரேஷன் கார்டு குறைதீர் முகாம்