×

ரஜினிகாந்த் அரசியல்வாதி அல்ல, அவர் ஒரு நடிகர்: பெரியாரை பற்றி பேசும்போது சிந்தித்து பேச வேண்டும்....மு.க.ஸ்டாலின் பேட்டி

சென்னை: சிஏஏவுக்கு எதிராக வரும் 24-ம் தேதி திமுக சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணைப் பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, வி.பி.துரைசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன் உள்ளிட்ட உயர்மட்ட நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இந்த செயற்குழு கூட்டத்தில், நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக தோல்வி அடைந்த இடங்களுக்கு பொறுப்பான நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. அடுத்து நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து, இக்கூட்டத்தில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் போன்ற முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

இதனையடுத்து மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசியதாவது; உள்ளாட்சி தேர்தலில் மகத்தான வெற்றியை தேடி தந்த வாக்காள பெருமக்களுக்கு நன்றி செலுத்தும் தீர்மானம் நிறைவேற்றபட்டது. சிஏஏவுக்கு எதிராக வரும் 24-ம் தேதி திமுக சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும். நடிகர் ரஜினிகாந்த் பெரியார் குறித்து யோசித்து சிந்தித்து பேச வேண்டும். ரஜினி அரசியல்வாதி அல்ல, அவர் ஒரு நடிகர். ரஜினியிடம் நான் ஒன்றை விரும்பி வேண்டிக் கேட்டு கொள்கிறேன்.95 ஆண்டு காலம் தமிழினத்திற்காக போராடியவர் பெரியார். அப்படிப்பட்டவரைப் பற்றிப் பேசும்போது சிந்தித்து,யோசித்துப் பேச வேண்டும். அதை நடிகர் ரஜினிகாந்த் உணர வேண்டும்.

Tags : Rajinikanth ,politician ,Periyar , Rajinikanth, Politician, Periyar, MK Stalin
× RELATED பழம்பெரும் நடிகரும், இயக்குனரும்,...