×

பள்ளிக்குள் சமூகவிரோதிகள் அட்டூழியம்: ஆசிரியர்கள், மாணவர்கள் சாலை மறியல்: சிந்தாமணியில் பரபரப்பு

அவனியாபுரம்: பள்ளிக்குள் மலம்கழித்த சமூக விரோதிகளை கண்டித்து ஆசிரியர்கள், மாணவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அவனியர்புரம் அருகே சிந்தாமணி கிழக்குத் தெருவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு ஒரு தலைமை ஆசிரியர் உட்பட 6 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். 85 மாணவர்கள் படித்து வருகின்றனர். பொங்கல் விடுமுறையையொட்டி ஐந்து நாள் விடுமுறைக்கு பின் நேற்று காலை பள்ளியை திறக்க வந்தனர். அப்போது ஆசிரியர்கள், மாணவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தேசிய கொடி கம்பம் அருகே மற்றும் மாணவர்கள் பயிலும் பள்ளிக்கூட வகுப்பறை கட்டிடம் ஆகிய இடங்களில் சில சமூக விரோதிகள் மலம் கழித்து நாறடித்திருந்தனர். இதேபோல் பலமுறை இதற்கு முன்னர் நடந்துள்ளதால் இதற்கு முற்றுபுள்ளி வைக்க மாணவர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் சிந்தாமணியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து வந்த அவனியாபுரம் போலீசார் தலைமை ஆசிரியர் மற்றும் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மீண்டும் பள்ளிக்கு அழைத்துச் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அவர்களை சமாதானப்படுத்தினர். சமூக விரோதிகள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததன் பேரில் கலைந்து சென்றனர். இதனால் ஒரு மணி நேரம் தாமதமாக பள்ளி துவங்கியது. அரை மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது. இது குறித்து பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறுகையில், ‘‘‘நடுநிலைப்பள்ளியை சுற்றிலும் முட்புதர்கள் உள்ளது. இதனை தூய்மைப்படுத்தவில்லை. மேலும் காலைக் கடன்களை கழிப்பதற்கு பள்ளியைச் சுற்றி பயன்படுத்துகின்றனர். விடுமுறை நாட்களில் சமூகவிரோதிகள் பள்ளியின் உள்ளே சென்று மனிதக் கழிவுகளால் அசிங்கப்படுத்துகின்றனர். இதனை பலமுறை கண்டித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆசிரியர்கள், மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டோம். போலீசார் உரிய நடவடிக்கை மேற்கொண்டு இனிமேல் நடக்காமல் தடுக்க வேண்டும்’’ என்றார்.

Tags : teachers ,Atrocities ,school ,road , Inside school, bullies, atrocities: teachers, students, road rage
× RELATED அரசு உத்தரவை மீறி பள்ளிகளில் சிறப்பு...