×

சாலை விதிகளை மீறுவோருக்கான அபராத தொகையை மேலும் குறைக்க பரிசீலனை: போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

சென்னை: சாலை விதிகளை மீறுவோருக்கான அபராத தொகையை மேலும் குறைக்க பரிசீலித்து வருவதாக போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில் 31வது சாலை பாதுகாப்பு வார விழாவினை முன்னிட்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சாலை விதிகளை மீறுவோருக்கான அபராத தொகையை மேலும் குறைக்க பரிசீலித்து வருவதாக தெரிவித்தார். அதுமட்டுமல்லாது, சாலை விபத்துகளை குறைக்க முதற்கட்டமாக செங்கல்பட்டு முதல் திருச்சி வரை வரை ஆட்டோமேடிக் கேமரா பொருத்தப்பட்டு வருவதாகவும், அதன் மூலம் சாலை விதிகளை மீறுவோர் கண்காணிக்கப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், ஹெல்மெட் அணியாமல் செல்வதால் விபத்துகளில் 60% பேர் உயிரிழக்கின்றனர் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார். சாலை விபத்தில் உயிரிழப்போரில் 75% பேர் 15 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள். அதில், ஆண்களின் உயிரிழப்பு அதிகம் எனவும், குறிப்பாக இளைஞர்கள் அதிகமாக உயிரிழப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். மேலும், நகர்ப்புறங்களில் 90% பேர் கட்டாயமாக ஹெ்மெட் அணிவதாக தெரிவித்த அமைச்சர் கிராமப்புற பகுதிகளில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார். 2018ம் ஆண்டில் சாலை விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10,000 வாகனங்களுக்கு 3 என குறைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவிலேயே சாலை விபத்துகளை குறைத்த மாநிலம் தமிழகம் என்ற விருது மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.


Tags : Vijayabaskar ,road , Road Rules, Penalties, Department of Transport, MR Vijayabaskar
× RELATED அதிமுக மாஜி அமைச்சரின் கல்லூரியில் மாணவன் சாவு