×

பாம்பன் முதல் ராமேஸ்வரம் வரை ஸ்கேட்டிங் மூலம் மாணவர்கள் கொரோனா விழிப்புணர்வு

ராமேஸ்வரம்: கோவையை சேர்ந்த பள்ளி மாணவர்கள் கொரோனா பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் ஸ்கேட்டிங் செய்தனர். கோயம்பத்தூர் அருகிலுள்ள கோவைப்புதூர் ஆஷ்ரம் மெட்ரிக் பள்ளியில் படித்து வரும் மாணவர்கள் தனுஷ்(13), முரளீதரன்(11), கவின்தரன்(7). பள்ளியில் ஸ்கேட்டிங் பயிற்சி பெற்று வரும் இவர்கள் மக்களிடையே கொரோனா பாதுகாப்பு, உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்  நேற்று பாம்பன் சாலைப்பாலத்தில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை வரை 33 கி.மீ தேசிய நெடுங்சாலையில் ஸ்கேட்டிங் செய்தனர். காலில் ஸ்கேட்டிங் சக்கரங்களை மாட்டிக்கொண்டு ஸ்கேட்டிங் செய்தபடியே சாலையில் சென்ற இவர்கள் தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களிலும் பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் மத்தியில் கொரோனா பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். நீண்ட தூரம் ஸ்கேட்டிங் செய்து விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்ட சிறுவர்கள் மூவரையும் பொதுமக்கள் பாராட்டினர்….

The post பாம்பன் முதல் ராமேஸ்வரம் வரை ஸ்கேட்டிங் மூலம் மாணவர்கள் கொரோனா விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Corona ,Bomban ,Rameswaram ,Goa ,Dhanushkodi National Highway ,Coimbutore ,
× RELATED மின் தடையை சீரமைக்க கோரிக்கை