×

முன்விரோத தகராறில் பழிக்குப்பழி ஆட்டோவில் கடத்தி ரவுடி வெட்டி கொலை

* கல்குட்டையில் உடல் வீச்சு
* 3 பேர் கைது

சென்னை: திருவல்லிக்கேணியை சேர்ந்தவர் ராம்குமார் (24). ரவுடியான இவர் மீது, மயிலாப்பூர், ஐஸ்அவுஸ் காவல்நிலையங்களில் திருட்டு மற்றும் அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. ஏ.சி. மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு மயிலாப்பூர் நடேசன் சாலையில் டீக்கடையில் நண்பர்களுடன் ராம்குமார் பேசிக் கொண்டிருந்தார். அப்போது 2 ஆட்டோக்களில் வந்த 11 பேர் கத்திமுனையில் ராம்குமாரை பிடித்து ஆட்டோவில் கடத்தி சென்றனர். பின்னர் நடுக்குப்பம் 5வது தெருவில் உள்ள பொது கழிவறைக்குள் அழைத்து சென்று சரமாரியாக கத்தியால் வெட்டினர்.

தகவல் அறி்ந்து ஐஸ்அவுஸ் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதை பார்த்த மர்ம கும்பல் தாங்கள் வந்த ஆட்டோவிலேயே ராம்குமாரை தூக்கிப் போட்டு தப்பினர். புகாரின்படி திருவல்லிக்கேணி நடுக்குப்பம் 8வது தெருவை சேர்ந்த அப்பு (24), பிரேம்குமார் (25), ஆட்டோ டிரைவர் சிவமணி (24), அப்துல் ரஹிம் (24), அஸ்மத் (23), சுபான் (22), கார்த்திக் (25), ரஞ்சித் (22), வினோத் (24), ஜெகன் (29), அருண் (30) ஆகிய 11 பேர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். ஆட்டோ பதிவெண்ணை வைத்து திருவல்லிக்கேணி பி.எம்.தர்கா பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அருண், ஜெகன், அப்பு ஆகிய மூன்று பேரை போலீசார் அதிரடியாக பிடித்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே கோவளம் கடலோர காவல்படை காவல் நிலையம் பின்புறம் உள்ள கல்குட்டையில் வெட்டு காயங்களுடன் இறந்த நிலையில் இருந்த ராம்குமார் உடலை மீட்டனர். அதைதொடர்ந்து 3 பேரையும் கைது செய்து நடத்திய விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது: பொங்கல் பண்டிகையன்று குடிபோதையில் நடுக்குப்பத்தை சேர்ந்த பிரேம்குமாருக்கும், கொலை செய்யப்பட்ட ராம்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கையில் வைத்திருந்த பீர் பாட்டிலை ராம்குமார் தரையில் உடைத்து பிரேம்குமாரை கழுத்தில் பலமாக குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் படுகாயமடைந்த பிரேம்குமார் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பிறகு பிரேம்குமார் ஐஸ்அவுஸ் காவல் நிலையத்தில் ராம்குமார் மீது புகார் அளித்தார்.

அதன்படி போலீசார் ராம்குமார் மீது வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த அவரை தேடி வந்தனர். இதற்கிடையே மயிலாப்பூர் நடேசன் சாலையில் டீக்கடை ஒன்றில் ராம்குமார் இருப்பதாக நண்பர்கள் மூலம் பிரேம்குமாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி ராம்குமார் டீக்கடை அருகே இருந்ததால் பிரேம்குமார் தனது நண்பர்கள் உதவியுடன் ஆட்டோவில் கடத்தினார். தன்னை பாட்டிலால் குத்திய இடத்திற்கே ராம்குமாரை அழைத்து சென்று கழிவறையில் வைத்து சரமாரியாக வெட்டி 11 பேரும் கொலை செய்துவிட்டு, 5வது தெருவிலேயே உடலை வீசிவிட்டு சென்றனர். பின்னர் மீண்டும் ஆத்திரம் அடையாத பிரேம்குமார் மீண்டும் ராம்குமாரை ஆட்டோவில் கடத்திச் சென்று உயிரிழந்தாரா என்று உறுதி செய்த பிறகு கோவளம் அருகே உள்ள கல்குட்டையில் உடலை வீசிட்டு 8 நண்பர்களுடன் தலைமறைவாகிவிட்டார். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.


Tags : Rowdy ,death , Revenge, auto, kidnapper, rowdy, cut and killed
× RELATED குண்டர் சட்டத்தில் ரவுடி கைது