×

பாலக்காட்டில் கால்பந்து மைதான கேலரி இடிந்தது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் தன்ராஜ். தேசிய கால்பந்து வீரரான இவர் சமீபத்தில் மரணமடைந்தார். இவரது குடும்பத்துக்கு நிதி சேகரிக்கும் வகையில் அங்கு நட்பு ரீதியான கால்பந்து போட்டி நடத்த தீர்மானிக்கப்பட்டது. இதன்படி நூரணி பகுதியில் உள்ள கால்பந்து மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு போட்டி நடந்தது. போட்டியை பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். இதற்காக அங்கு தற்காலிக கேலரி அமைக்கப்பட்டிருந்தது.
போட்டி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த போது மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த ஒரு பக்க கேலரி திடீரென இடிந்து விழுந்தது. இதில் அங்கு போட்டியை பார்த்துக் கொண்டிருந்த 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதில் 2 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags : football ground gallery ,Palakkad ,The Football Ground Gallery , Palakkady, football, stadium gallery, demolished
× RELATED கேரளா பாலக்காடு பகுதியில் உள்ள...