×

போலீசார் தகவல் தொடர்புக்கு போல்நெட் 2.0 சேவை துவக்கம்

புதுடெல்லி: போலீஸ் தகவல் தொடர்புக்காக மல்டி மீடியா மற்றும் காணொளி காட்சி வசதியுடன் மேம்படுத்தப்பட்ட ‘போல்நெட் 2.0’ சேவையை மத்திய உள்துறை இணை அமைச்சர் நிதியானந்த ராய் நேற்று தொடங்கி வைத்தார். பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பேரழிவு நிவாரண அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்கும் இரண்டு நாள் மாநாடு, டெல்லி விஞ்ஞான் பவனில் நேற்று தொடங்கியது. இதில் போல்நெட் 2.0 சேவையை மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் நேற்று தொடங்கி வைத்தார். மல்டி மீடியா, காணொளி காட்சி வசதிகளுடன் போல்நெட் சேவை தற்போது மேம்படுத்தப்பட்டு, போல்நெட் 2.0 எனவும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதற்காக நாட்டின் 4 முக்கிய இடங்களில், இன்டர்நெட், காணொளி காட்சி வசதியுடன் தகவல் தொடர்பு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. பேரழிவு மீட்பு நடவடிக்கையின்போது மத்திய, மாநில பாதுகாப்பு படையினர், தீயணைப்பு படையினர், மருத்துவமனைகள், பேரிடர் மீட்பு படையினர் ஆகியோரின் தகவல் தொடர்புகளை போல்நெட் 2.0 ஒன்றிணைக்கும். இவற்றின் மூலம் போட்டோக்கள், வீடியோக்கள் மற்றும் இதர விவரங்களை பகிர்ந்து கொள்ள முடியும். புதிய போல்நெட் 2.0 சேவை, செயற்கைக்கோளின் சி-பாண்ட் டிரான்ஸ்பாண்டர்கள் மூலம் செயல்படும்.

Tags : Launch , Cops, Communications, Bolnet, 2.0 Service, Boot
× RELATED தனியார் நிறுவன ராக்கெட் ஏவுவதற்கு இஸ்ரோ அனுமதி!!