×

மேட்டூர் நீர்மட்டம் 108 அடி

மேட்டூர்: மேட்டூர் அணைக்கான நீர்வரத்து நேற்று முன்தினம் விநாடிக்கு 824 கனஅடியாக இருந்தது, நேற்று காலை அது 655 கனஅடியாக சரிந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு, விநாடிக்கு 4 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படுகிறது. வரத்தை விட நீர்திறப்பு அதிகமாக இருப்பதால், நீர்மட்டம் மளமளவென குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் 109.20 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று 108.98 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 76.96 டிஎம்சி. ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் விநாடிக்கு 1000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 800 கனஅடியாக சரிந்தது.

Tags : Mettur , Mettur water level
× RELATED 3 ஆண்டாக உரிய நேரத்தில் தண்ணீர் திறப்பு பருத்திக்கு நல்ல விலை கிடைக்கிறது