×

பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலை தடுக்கும் புதிய சட்டத்துக்கு இறுதி வடிவம்: மக்களிடம் கருத்து கேட்க அமைச்சர்கள் குழு முடிவு

புதுடெல்லி: பணியிடத்தில் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் தடுக்க ‘விசாகா’ குழு வழிகாட்டுதல்படி புதிய சட்டம் கொண்டு வர அமைக்கப்பட்ட மத்திய அமைச்சர்கள் குழு, அதன் பரிந்துரைக்கு இறுதி வடிவம் கொடுத்துள்ளது. ெதாடர்ந்து பொதுமக்களிடம் கருத்து கேட்க அமைச்சர்கள் குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. கடந்த அக்டோபர் 2018ல் பல பெண்கள் தாங்கள் பாலியல் ரீதியாக பணியிடத்தில் (மீடூ) எதிர்கொண்ட துன்புறுத்தல்கள் குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர். மேலும், பணியிடத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை தடுக்க, கடுமையான சட்டத்தை கொண்டு வர மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் 2019 ஜூலையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்த குழுவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மனிதவள மற்றும் மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் போக்ரியால் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானி மற்றும் உறுப்பினர்களாக பல்வேறு சட்ட அமைப்புகளின் அதிகாரிகள் இடம் பெற்றிருந்தனர்.

இந்நிலையில், பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களைத் தடுப்பதற்கான சட்ட கட்டமைப்பை  வலுப்படுத்தும் மத்திய  அமைச்சர்கள் குழு, தங்களது சட்ட பரிந்துரைகளை இறுதி செய்துள்ளது. மேலும், இப்பிரச்னை தொடர்பாக இந்திய தண்டனைச் சட்டத்தில் புதிய விதிகளைச் சேர்ப்பது உள்ளிட்ட பரிந்துரைகள் குறித்து பொதுமக்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.  இதுகுறித்து, மூத்த உள்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘பணியிடத்தில் தற்போதுள்ள பாலியல் துன்புறுத்தல் தொடர்பான சட்டங்களில் மாற்றங்கள் செய்யப்படும். இந்த திருத்தங்கள் மூலமாக பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை கிடைக்க வகை செய்யப்படும்’’ என்றார்.

Tags : sexual harassment ,workplace ,women ,New Law of Final ,Preventing Sexual Harassment , Women, Sexual Harassment, Committee of Ministers
× RELATED சென்னையில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: கைதானவர் மீது குண்டர் சட்டம்