×

போலி செய்திகள் புதிய அச்சுறுத்தல்: ஜனாதிபதி கருத்து

புதுடெல்லி:போலி செய்திகள் தற்போது புதிய அச்சுறுத்தலாக இருக்கிறது என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். டெல்லியில் பத்திரிக்கை துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கான விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசியதாவது: பிரேக்கிங் நியூஸ் என்ற நோயானது ஊடகங்களை ஆட்கொண்டுள்ளது. போலிச் செய்திகள் புதிய அச்சுறுத்தலாக உள்ளது. இதன் காரணமாக பத்திரிகையாளர்களுக்கான கட்டுப்பாடு மற்றும் பொறுப்பு என்ற அடிப்படை கொள்கை குறைந்து வருகிறது. போலிச் செய்திகளை வெளியிடுவோர் தங்களை பத்திரிகையாளராக அறிவித்து உன்னதமான தொழிலை களங்கப்படுத்துகின்றனர்.

 பத்திரிக்கையாளர்கள் தங்கள் கடமையின்போது பல தடைகளை சந்திக்க நேரிடுகிறது. உண்மையை வெளிக்கொணர ஆத்மார்த்தமான மற்றும் தன்னலமற்ற நோக்கம் வேண்டும். சமூக மற்றும் பொருளாதார அளவில் நியாயமற்ற செய்திகளை முற்றிலும் புறந்தள்ளிவிட வேண்டும். அதற்கு பதிலாக அறிவியலை ஊக்குவிக்கும் செய்திகளை வெளியிட வேண்டும். இவ்வாறு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறினார்.



Tags : Fake News ,President , Fake news, President
× RELATED ரஷ்யாவில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள்...