×

பொங்கலுக்கு பிறகும் குறையாத காய்கறி விலை: சின்னவெங்காயம், முருங்கைக்காய் விலை தொடர்ந்து உச்சம்

நெல்லை: பொங்கல் பண்டிகை முடிந்து 5 நாட்கள் கடந்த பிறகும் காய்கறிகள் விலை தொடர்ந்து உச்சத்தில் உள்ளன. சின்ன வெங்கயாம் கிலோ ரூ.125க்கும், முருங்கைக்காய் கிலோ ரூ.160க்கும் விற்பனையாகிறது. பொங்கல் பண்டிகை கடந்த 15ம்தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி காய்கறிகள் விற்பனை உச்சம் பெற்றது. குறிப்பாக வெங்காயம், முருங்கைக்காய் உள்ளிட்டவைகள் அதிகவிலையில் விற்கப்பட்டன. பொங்கலுக்கு பிறகு ஒரு சில காய்கறிகள் விலை மட்டும் குறைந்துள்ளன. குறிப்பாக வெங்காயம் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சின்ன வெங்காயம் தொடர்ந்து பாளை மகாராஜநகர் உழவர் சந்தையில் கிலோ ரூ.125க்கு இன்று விற்கப்பட்டது.

வெளிச்சந்தைகளில் கிலோ ரூ.140வரை விற்பனையானது. பல்லாரி வெங்காயம் கிலோ ரூ.60க்கு விற்கப்படுகிறது. முருங்கைக்காய் வரத்து தொடர்ந்து குறைவாக உள்ளது. பொங்கலன்று ஒரு கிலோ ரூ.200 முதல் 250 வரை விற்பனையானது. ஒரு முருங்கைக்காய் ரூ.25 என்ற விலையில் விற்கப்பட்டது. முருங்கைக்காய் இன்று உழவர் சந்தையில் கிலோ ரூ.160க்கும் பிற சந்தைகளில் ரூ.175க்கும் விற்கப்பட்டன. முருங்கைக்காய்  வரத்து அடுத்த 3 வாரங்களில் அதிகரிக்க  வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் ெதரிவித்தனர்.

இதனிடையே சில காய்கறிகள் விலை குறைந்துள்ளது. குறிப்பாக கத்தரிக்காய் முதல் ரகம் ரூ. 40ஆகவும், 3ம் தரம் கிலோ ரூ.25ஆகவும் குறைந்தது. தக்காளி கிலோ ரூ.20ஆக குறைந்துள்ளது. புடலங்காய் கிலோ ரூ.15, பாகற்காய் பெரியது ரூ.26, சுரைக்காய் கிலோ ரூ.12, தடியங்காய் கிலோ ரூ.15. பூசனிக்காய் கிலோ ரூ.18, கொத்தமல்லி கிலோ ரூ.20, புதினா கிலோ ரூ.45,  கறிவேப்பிலை ரூ.25, உருளைக்கிழங்கு ரூ.33, முட்டைகோஸ் ரூ.24 என விலை குறைந்துள்ளது.

Tags : Pongal, vegetable prices, small onions, drumstick
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...