×

எவரெஸ்ட் சிகரத்தில் புற்கள் : பிரிட்டன் விஞ்ஞானிகள் தகவல்

உலகின் உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் 19,600 அடி உயரம் வரை புற்கள், புதர்கள் காணப்படுகின்றன என பிரிட்டன் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 1993- 2018 வரையிலான நாசாவின் செயற்கைக்கோள் தரவுகளை ஆராய்ந்து, பிரிட்டன் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். 13,600 அடி உயரத்தில் இருந்து 19,600 அடி உயரம் வரை நான்கு அடுக்குகளாக பிரித்து ஆய்வு செய்தனர். வெப்பநிலை உயர்வு மற்றும் பருவநிலை மாற்றமே இதற்கு காரணம் என அவர்கள் தெரிவித்தனர். இமய மலை ஆண்டுதோறும் 8.60 கோடி கன மீட்டர் அளவு தண்ணீரை வழங்குகிறது.


Tags : scientists ,Mount Everest ,British , Everest, grasses, Britain, scientists
× RELATED பிரிட்டன் இளவரசி கேத் மிடில்டனுக்கு புற்றுநோய் என அதிர்ச்சி தகவல்