×

கரூர் அருகே தனியார் பஸ்சின் முன்பக்க டயர் கழன்று ஓடியதால் பரபரப்பு

கரூர்: கரூர் அருகே சேலம் நோக்கி சென்ற தனியார் பஸ்சின் முன்பக்க டயர் கழன்று ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. கரூரில் இருந்து நேற்று மதியம் ஒரு தனியார் பஸ் சேலம் நோக்கிச் சென்றது. பேருந்தில் ஏராளமான பயணிகள் சென்றனர். இந்நிலையில் பஸ் கரூர் சேலம் பைபாஸ் சாலை மண்மங்கலம் பண்டுதக்காரன்புதூர் அருகே சென்று கொண்டிருந்த போது, பஸ்சின் முன்பக்கத்தின் இடதுபுற டயர் கழன்று ஓடியது.

டயர் கழன்றதால் பஸ் குலுங்கியது. பஸ்சில் பயணம் செய்த அனைவரும் அதிர்ச்சியடைந்த சத்தம் போட ஆரம்பித்தனர். நிலையை உணர்ந்து கொண்ட டிரைவர், பஸ்சை லாகவமாக ஓட்டி பாதுகாப்பாக நிறுத்தினர். இதன் காரணமாக பயணிகள் அனைவரும் நிம்மதியடைந்தனர். மேலும், இந்த சம்பவம் காரணமாக, பஸ்சில் பயணம் செய்த சிலர் லேசாக காயமடைந்தனர். இந்த சம்பவம் காரணமாக இந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Karur , karur
× RELATED திருவண்ணாமலையில் பரிதாபம் பஞ்சர் ஓட்டும்போது டயர் வெடித்து முதியவர் பலி