×

இந்திய பெருங்கடல் பகுதியில் ஏற்படும் ஆபத்தை முறியடிக்க தஞ்சாவூர் விமானப்படை பிரிவில் சுகோய்-30 MKI ரக போர் விமானம் இன்று இணைப்பு

தஞ்சை: தஞ்சையில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள சுகோய் போர் விமானப்படை தளம் இன்று நாட்டுக்கு அர்பணிக்கப்பட்டு இருக்கிறது. பிரம்மோஸ் ஏவுகணைகளுடன் இங்கு அணிவகுக்கும் சுகோய்-30 MKI ரக போர் விமானங்கள் இந்திய பெருங்கடல் ஆபத்தை முறியடிக்கும் வல்லமை கொண்டவை. இந்திய பாதுகாப்புத்துறையில் தஞ்சை இன்று மிக முக்கிய கட்டத்தை எட்டியிருக்கிறது. முன்னணியில் சண்டை போர் விமானங்களான சுகோய் போர் விமானங்கள் என்று பிரத்யேக விமானப்படைத்தளம் இன்று ஏற்படுத்தப்பட்டு இருப்பதே இதற்கு முக்கிய காரணம்.

இந்த விமானப்படை தளத்தை தற்போது நாட்டுக்கு அர்பணிக்கப்பட்டு இருக்கிறது. தஞ்சையை பொறுத்தவரை அங்குள்ள புதுக்கோட்டை சாலையில் 1940-ம் ஆண்டில் தஞ்சை விமானப்படைத்தளம் அமைக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போரின் போது இந்த விமானப்படைத்தளம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக திகழ்ந்தது. அதற்கு பின்னர் போதிய பராமரிப்பு இன்றி காணப்பட்டது. இதனையடுத்து இந்த விமானப்படைத்தளம் பொலிவுப்படுத்தப்பட்டு கடந்த 2013-ம் ஆண்டில் சுகோய் போர் விமானங்கள் அணிவகுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கடந்த 6 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட இப்பணி தற்போது நடைமுறைக்கு வந்தது. இன்றைய தினம் தஞ்சையில் விமானப்படைத்தளத்தில் சுகோய்-30 MKI ரக போர் விமானங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

இவை அனைத்தும் பிரம்மோஸ் ஏவுகணைகளை தாக்கி இருக்கின்றன. குறிப்பாக இந்திய பெருங்கடல் பகுதியில் ஏற்படும் ஆபத்தை முறியடிக்கவே தஞ்சாவூர் பிரிவுக்கு இத்தகைய விமானப்படைத்தளம் அமைக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றன. சுகோய்-30 MKI ரக போர் விமானப்படைத்தளத்தை நாட்டுக்கு முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் அர்ப்பணித்து இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் தற்போது பல்வேறு பாதுகாப்புத்துறை  சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கலந்துக்கொண்டு இருக்கிறார்கள். அதனைத்தொடர்ந்து இங்கு பல்வேறு விமான சாகசங்கள் நடைபெற்று வருகின்றன. ஹெலிகாப்டர்கள் வானில் வட்டமிட்டு சாகசங்கள் நிகழ்த்தி வருகின்றன.

சீனா, இலங்கை உள்ளிட்ட நாடுகளால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறப்படுகிறது. ஏனென்றால் இலங்கையை பொறுத்தவரை முற்றிலுமாக சீனாவை சார்ந்து இருக்கிறது, எனவே இந்த இந்திய பெருங்கடல் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு இருக்கிறது. அந்த வகையில் தான் தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தின் தஞ்சாவூரில் சுகோய் போர் விமானப்படைகளுக்கான பிரத்யேக தளம் அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த அணிவகுப்பு நிகழ்ச்சிதான் தற்போது நடைபெற்று வருகிறது.

பொதுவாக இந்தியாவின் சில இடங்களில் சுகோய் போர் விமானங்கள் அணிவகுக்கக்கூடிய விமானப்படை தளம் இருந்தாலும் தமிழகத்தின் நிறுவப்பட்டிருக்கக்கூடிய தஞ்சாவூரை மையமாக கொண்டுள்ள  சுகோய் போர் விமானபடை தளம் பிரம்மோஸ் ஏவுகணைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சுகோய்-30 MKI ரக போர் விமானங்கள் அனைத்திலும் பிரம்மோஸ் ஏவுகணைகள் பொருத்தப்பட்டிருக்கும், இந்த ஏவுகணையை பொறுத்தவரை 200 முதல் 300.கி.மீ தூரம்வரை துல்லியமாக இலக்கை தாக்கி அழிக்கக்கூடிய சக்தி வாய்ந்தவையாகும். தஞ்சாவூரை மையமாக கொண்டுள்ள போர் விமானபடை தளத்தில் தற்போது 6 விமானங்கள் மட்டுமே வந்துள்ளது. அடுத்த சில தினங்களில் 20-க்கும் மேற்பட்ட சுகோய்-30 MKI ரக போர் விமானங்கள் பிரம்மோஸ் ஏவுகணைகளுடன் இங்கு அணிவகுக்கும் என்று அதிகாரிகள் அறிவித்திருக்கின்றனர். இந்த தஞ்சாவூர் விமானப்படைத்தளம் என்பது இரண்டு நீளமான ஓடுதளங்களாக . 5,680 நீளமும், 4757 நீளமும் கொண்டதாகும். தஞ்சையில் நடக்கும் விழாவில் முப்படை தளபதி பிபின் ராவத், விமானப்படை தளபதி பதாரியா  மற்றும் பல்வேறு பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் பங்கேற்றனர்.


Tags : Thanjavur ,Thanjavur Air Force ,Air Force , Sukhoi-30 MKI fighter jet , Thanjavur, Air Force unit today
× RELATED தஞ்சாவூரில் பட்டப்பகலில் பரபரப்பு...