×

கேரளாவில் பள்ளிவாசலில் இந்து முறைப்படி திருமணம்: தந்தையை இழந்த பெண்ணுக்கு இஸ்லாமியர்கள் உதவி

ஆலப்புழா: கேரளாவில் இஸ்லாமியர்கள் ஒன்றிணைந்து பள்ளிவாசலில் இந்து மதத்தை சேர்ந்த ஜோடிக்கு திருமணம் செய்து வைத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆலப்புழா அருகே உள்ள சேரவல்லி பள்ளிவாசலில் இந்த திருமணம் நடத்தப்பட்டுள்ளது. சேரவல்லியை சேர்ந்த கணவனை இழந்த பெண் ஒருவர் தனது மகள் அஞ்சுவுக்கு திருமணம் செய்துவைக்க உதவிகோரி அதே பகுதியில் உள்ள முஸ்லீம் ஜமாத் கமிட்டிக்கு கடிதம் ஒன்றை கொடுத்துள்ளார். இதனையடுத்து, அந்த பெண்ணிற்கு உதவ முன்வந்த ஜமாத் கமிட்டியினர், பள்ளிவாசலிலேயே திருமணத்தை நடத்த இடமும் தந்து உதவியுள்ளனர்.

தொடர்ந்து பள்ளிவாசலில் மண்டபம் போடப்பட்டு இந்து மத முறைப்படி இஸ்லாமியர்கள் முன்னிலையில் அந்த ஜோடிக்கு தாலி கட்டி திருமணமும் நடத்தி வைக்கப்பட்டது. மணமகள் அஞ்சுவிற்கு ஜமாத் சார்பில் 10 சவரன் தங்க நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் ரொக்கம் திருமணப் பரிசாக வழங்கப்பட்டது. அத்துடன், திருமணத்திற்கு வந்திருந்த விருந்தினர்கள் 1000 பேருக்கு சைவ உணவு விருந்தும் பரிமாறப்பட்டது. மதத்தை கடந்த ஒற்றுமையை காட்டும் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.


Tags : wedding ,mosque ,Kerala , Kerala, mosque, Hindu marriage, Alappuzha
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...