×

மர்ம நபர்கள் புகைப்படம் எடுத்ததன் எதிரொலி கோயில்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு: பலத்த சோதனைக்கு பிறகு பக்தர்களுக்கு அனுமதி

சென்னை: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் சில தினங்களுக்கு முன்பு கோயில் வளாகத்திற்குள் உள்ள மண்டபம், பிரகாரம் உள்ளிட்ட பகுதிகளை மர்ம நபர்கள் சிலர் புகைப்படம் எடுத்ததாக வாட்ஸ் ஆப்பில் தகவல் பரவி வருகிறது. இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரத்தில் உள்ள முக்கியக் கோயில்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, போலீசார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காஞ்சிபுரத்தில் காமாட்சி அம்மன் கோயில், வரதராஜப் பெருமாள் கோயில், கைலாசநாதர் கோயில், ஏகாம்பரநாதர் கோயில் ஆகியவற்றில் ராஜகோபுரம் முன்பாக துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் கோயில்களின் நுழைவு வாயிலில் பக்தர்கள் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதிக்கப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். நகரில் உள்ள கோயில்களில் பல இடங்களில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீசார் 10க்கும் மேற்பட்டோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பண்டிகைக் காலங்களில் கூட்ட நெரிசல் மற்றும் எதிர்வரும் குடியரசு தினத்தை முன்னிட்டு கோயில்களில் பாதுகாப்பை பலப்படுத்தும்படி மத்திய புலனாய்வுத் துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது.
அதன் அடிப்படையிலேயே காஞ்சிபுரத்தில் உள்ள புராதனக் கோயில்களான காஞ்சி காமாட்சி அம்மன், வரதராஜ பெருமாள் கோயில், ஏகாம்பரநாதர் கோயில், கைலாசநாதசர் கோயில்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

Tags : gunmen ,temples ,police protection gunmen , Mystery figures, photo, echo, temple, gun, police, security, devotee, permit
× RELATED கோயில்களில் நாளை முதல் பக்தர்களுக்கு...