×

குறைதீர் கூட்டம்

சென்னை: போரூர் கோட்டத்தில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது என மின்வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மின்வாரியம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘போரூர் கோட்டத்திற்கான மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை காலை 11 மணியளவில், 1வது தளம், 110 கி.வோ துணை மின்நிலைய வளாகம், போரூர், சென்னை-116 என்ற முகவரியில் அமைந்துள்ள செயற்பொறியாளர்/ போரூர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே, போரூர் கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர் இந்த குறைதீர் கூட்டத்தில் பங்கேற்று பயனடையலாம்,’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Grievance meeting , Obey, crowd
× RELATED மக்கள் குறைதீர் கூட்டம் ஜூன் 8 வரை ரத்து