×

தனியார் ரயில்களில் வசூல் குறைந்தால் 180 மடங்கு அபராதம்: அப்ப விமான கட்டணம்தான் போங்க...

புதுடெல்லி: தனியார் ரயில்களில் வசூல் குறைந்தால், சம்பந்தப்பட்ட நிறுவனம் அரசுக்கு 180 மடங்கு அபராதம் செலுத்த வேண்டி வரும் என வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் மத்திய அரசு, முக்கிய வழித்தடங்களில் 150 தனியார் ரயில்களை இயக்க உள்ளது. தமிழகத்தில் சென்னையில் இருந்து மதுரை, கோவை உட்பட முக்கிய வழித்தடங்களில் தனியார் ரயில்கள் இயங்கும். இதற்கான விதிகள், ஒப்பந்த மாதிரிகள் நிதி ஆயோக்கின் வரைவு அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளன. அதில், தனியார் ரயில் இயக்க ஒப்பந்தம் செய்யும் நிறுவனங்கள், ஒவ்வொரு மாதமும் முந்தைய மாதத்தைவிட ஒரு சதவீதம் அதிகம் வருவாய் ஈட்ட வேண்டும்.

வருவாய் இலக்கு குறைந்தால், அதனால் ஏற்படும் வித்தியாச தொகையை 180 மடங்கு அபராதத்துடன் ஒப்பந்த நிறுவனம் அரசுக்கு செலுத்த வேண்டும் என வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தனியார் ரயில்களில் அதை நிர்வகிப்பவர்களே கட்டணங்களை நிர்ணயிக்கலாம். இந்த சூழ்நிலையில், வசூல் குறைந்தால் ஒப்பந்த நிறுவனத்துக்கு கடும் அபராதம் விதிக்கப்படுவதால், இதற்கேற்பவே தனியார் ரயில் நிறுவனங்களின் ரயில் கட்டணம் இருக்கும். போட்டி கட்டணத்துக்கு வாய்ப்பே இல்லை என்பதால், தனியார் ரயில்களில் டிக்கெட் கட்டணம், விமான கட்டணத்துக்கு இணையாக இருக்கலாம் என சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Private train, charge, 80 times, fine, air fare
× RELATED உபியின் பிரபல தாதா முக்தார் அன்சாரி மாரடைப்பால் மரணம்