×

பொங்கல் மது விற்பனையில் திருச்சி மாவட்டம் முதலிடம்: 2நாளில் ரூ.13 கோடிக்கு குடித்து தீர்த்த குடிமகன்கள்

திருச்சி: பொங்கல் பண்டிகையின் போது தமிழகத்தில் மது விற்பனை ரூ.605 கோடிக்கு விற்பனையாகி உள்ளது. இதில் திருச்சி மண்டலத்தில் மட்டும் ரூ.143 கோடிக்கும், மாவட்டத்தில் 2 நாளில் ரூ.13கோடிக்கும் மது விற்பனையாகி முதலிடம் பிடித்திருக்கிறது. தமிழகத்தில் சாதாரண நாட்களில் ரூ.80 முதல் 90 கோடிக்கு மது விற்பனையாகும். அதேசமயம் பண்டிகை சமயங்களில் இது இரட்டிப்பு ஆகும். அந்த வகையில் பொங்கல் பண்டிகையின் போது அதாவது கடந்த 14, 15 மற்றும் 17 ஆகிய மூன்று நாட்களில் மட்டும் ரூ.605 கோடிக்கு மதுவிற்பனையாகி உள்ளது.

14ம்தேதியான போகி பண்டிகை அன்று ரூ.178 கோடிக்கும், 15ம் தேதியான பொங்கல் பண்டிகை அன்று ரூ.253 கோடிக்கும், 17ம் தேதி காணும் பொங்கல் அன்று ரூ.174 கோடிக்கும் மது விற்பனையாகி உள்ளது. இதில் திருச்சி மண்டலத்தில் மட்டும் ரூ.143 கோடிக்கு மது விற்பனையாகி முதலிடத்தை பிடித்துள்ளதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவித்தன. திருச்சி மாவட்டத்தில் உள்ள 177 டாஸ்மாக் கடைகளில் மது பானங்கள் விற்பனை அமோகமாக நடந்தது. கடந்த 15ம் ேததி மாவட்டத்தில் மொத்தம் ரூ.7 கோடியே 56லட்சத்துக்கு மது விற்பனையானது.

16ம் தேதி திருவள்ளுவர் தினத்தையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டது. காணும் பொங்கலன்று(17ம் தேதி) ரூ.5கோடியே 63லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனையானது. 2 நாட்களில் மட்டும் ரூ.13கோடியே 19 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனையானதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Citizens ,Trichy , Pongal, liquor sales, Trichy, tops
× RELATED துபாய் மழை, வெள்ளம்: பாதிக்கப்பட்ட...