×

அருப்புக்கோட்டையில் பயன்பாட்டிற்கு வராமலேயே பாழாய்ப்போன பூங்காக்கள்: நகராட்சி பணம் வீண்

அருப்புக்கோட்டை: போதிய பராமரிப்பு இல்லாததால் அருப்புக்கோட்டையில் பயன்பாட்டிற்கு வராமலேயே பாழாகி வருகின்றன. இதனால் நகராட்சி நிதி வீணடிக்கப்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சி மூலம் அஜீஸ் நகர், வசந்தம் நகர், ரயில்வே பீடர் ரோடு, எம்டிஆர் நகர், கணேஷ்நகர் ஆகிய பகுதிகளில் மக்களின் பொழுதுபோக்கிற்காக பூங்கா ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு பூங்காவும் ரூ.20 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் அஜீஸ்நகர் பூங்கா மட்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. மற்ற பூங்காக்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை.

சொக்கலிங்கபுரம் எம்டிஆர் நகர், கணேஷ்நகர் பகுதி ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்ட பூங்காக்களில் குழந்தைகளுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள் வசதி செய்யப்படவில்லை. அழகிய வண்ண செடிகள், செயற்கை புல்தரைகள் அமைக்கப்பட்டு தண்ணீர் இல்லாமல் கருகி விட்டன. நல்லமுறையில் செயல்பட்டு வந்த அஜீஸ்நகர் பூங்காவும் பராமரிப்பு இல்லாமல் பூச்செடிகள் கருகி பாழாகிவிட்டன. நகரில் அமைக்கப்பட்ட அனைத்து பூங்காக்களும் போதிய பராமரிப்பு இன்றி பல லட்சம் ரூபாய் வீணாகிவிட்டது. நகரில் பொழுதுபோக்க பொதுமக்களுக்கு எந்தவித இடமும் இல்லை.

பூங்காக்களை பராமரிப்பு செய்தால் பொதுமக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும். நகராட்சி நிர்வாகம் பூங்காக்களை பராமரிப்பு செய்ய பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : parks ,Aruppukkottai , Aruppukkottai, Parks
× RELATED அருப்புக்கோட்டை காந்திநகர் பஸ்...