×

திருப்போரூர் பேரூராட்சியில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்: புகார் மீது அதிகாரிகள் அலட்சியம்

திருப்போரூர்: திருப்போரூர் பேரூராட்சி பகுதியில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. இவற்றை சீரமைக்காமல் அதிகாரிகள் மெத்தனமாக உள்ளனர்.திருப்போரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். செம்பாக்கம், கொண்டங்கி மற்றும் சிறுதாவூர் பகுதிகளில் கிணறுகள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு திருப்போரூர் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் சேமிக்கப்பட்டு பின்னர் இங்கிருந்து இப்பகுதி மக்களுக்கு 3 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்படுகிறது. இந்த குடிநீர் சப்ளையை கண்காணிக்கவும் பராமரிக்கவும் 15க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றுகின்றனர்.

தற்போது நடைபெற்றுவரும் பாதாள சாக்கடை திட்டப்பணி மற்றும் அரசியல் கட்சியினர் விளம்பர பேனர் வைப்பதற்காக சாலையில் பள்ளம் தோண்டுவதால் ஆங்காங்கே குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. இதுகுறித்து பேரூராட்சி  நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். இதன்காரணமாக சாலையில் தேங்கியுள்ள நீரில் புழுக்கள் உருவாகி கடும் துர்நாற்றம் வீசுகிறது. தொற்றுநோய் உருவாகி மக்களுக்கு பல்வேறு  உடல்உபாதைகள் ஏற்படுகிறது. எனவே, உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க வேண்டும் என்று பேரூராட்சிக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Tiruppore , Drinking of wasted water at Tiruppore:
× RELATED திருப்போரூர் - திருப்பதி - வேலூர் இடையே...