×

காஷ்மீரில் கடுங்குளிர் பொதுமக்கள் பாதிப்பு

ஸ்ரீநகர்: காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களில் கடும் பனிப் பொழிவால்,  உறைய வைக்கும் அளவுக்கு கடுங்குளிர் நிலவி வருகிறது. சாலைகளில் பனியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. ஸ்ரீநகரில் குறைந்தபட்சமாக நேற்று முன்தினம் மைனஸ் 0.8 டிகிரி செல்சியசாக இருந்த வெப்பநிலை நேற்று -1.4 ஆக குறைந்தது.  

இதே போன்று காசிகுந்த் பகுதியிலும் வெப்பநிலை நேற்று -1.4 ஆக பதிவாகி இருந்தது. சுற்றுலாத் தலமான பஹல்காம் பகுதியில் வெப்பநிலை -6.8, கோகெர்னாக்கில் -2.1, குப்வாராவில் -4.8 டிகிரி செல்சியசும் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், லே பகுதியில் -13 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியது.

Tags : Kashmir ,public ,General Public , general,public's, vulnerability , Kashmir
× RELATED காஷ்மீர், இமாச்சல், பஞ்சாப், அரியானா...