×

ஹோபர்ட் டென்னிஸ் சானியா ஜோடி சாம்பியன்

ஹோபர்ட்: ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் தொடரின் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா - நடியா கிச்சனோக் (உக்ரைன்) ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.இறுதிப் போட்டியில் சீனாவின் பெங் ஷுவாய் - ஷுவாய் ஸாங் ( 2ம் நிலை) ஜோடியுடன் நேற்று மோதிய சானியா - நடியா ஜோடி 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வென்று கோப்பையை முத்தமிட்டது.  

விறுவிறுப்பான இப்போட்டி 1 மணி, 21 நிமிடத்துக்கு நீடித்தது. குழந்தை பெற்றுக்கொண்டு 2 ஆண்டுகளுக்கும் மேலாக டென்னிஸ் போட்டிகளில் இருந்து விலகியிருந்த சானியா, மீண்டும் களமிறங்கிய முதல் தொடரிலேயே சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அவருக்கு விளையாட்டு பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Tags : Hobart Dennis Sania Couple Champion , Hobart, Dennis Sania, Couple, Champion
× RELATED சாம்பியன் ஜுவென்டஸ் அதிர்ச்சி தோல்வி