காணும் பொங்கல் தினத்தில் அதிமுக பிரமுகர் போலீசார் வாக்குவாதம்: சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்

சென்னை: அதிமுக பிரமுகர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. காணும் பொங்கலையொட்டி நேற்று முன்தினம் சென்னை மெரினா கடற்கரையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் குடும்பம் குடும்பமாக காணும் பொங்கலை கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நிலையில் மக்கள் கூட்டம் அதிகமாக வருவதால் திருட்டு போன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் 5,000 போலீசார் மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

இதனால் மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில் இருசக்கர வாகனங்கள், கார்கள் போன்ற எந்த ஒரு வாகனமும் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்றுமுன்தினம் அதிமுக பிரமுகர் ஒருவர் தன்னுடைய காரில் மெரினா கடற்கரைக்கு வந்துள்ளார். அப்போது தன்னுடைய காரை சர்வீஸ் சாலைக்குள் அனுமதிக்கும்படி போலீசாரிடம் கேட்டுள்ளார். ஆனால் போலீசார் வாகனங்களை உள்ளே செல்ல அனுமதிக்காததால் அவருடைய காரையும் உள்ளே செல்ல மறுத்துள்ளனர்.
இதையடுத்து ஆத்திரமடைந்த அந்த அதிமுக நபர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மற்றும் உதவி ஆணையரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இச்சம்பவத்தை அப்பகுதியில் பொதுமக்கள் யாரோ தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Tags : Pongal, AIADMK, Police, Argument, Social Website, Video Viral
× RELATED தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு