×

பழநி மலைக்கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி மூலவருக்கு நாளை அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சி: 4 மணி நேரம் தரிசனத்திற்கு அனுமதியில்லை

பழநி: பழநி மலைக்கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி மூலவர் பீடத்திற்கு அஷ்டபந்தன மருந்து சாத்தும் நிகழ்வு நாளை நடக்க உள்ளதால், காலை 6.30 மணி முதல் 10.30 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் உள்ள மூலவர் சிலை அரிய வகை நவபாஷாணத்தால் ஆனது. இக்கோயிலில் கடந்த 2006ல் கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது மூலவர் பீடத்தில் அஷ்டபந்தன மருந்து சாத்தப்பட்டது. 13 வருடங்கள் ஆவதால், தொடர் பூஜை காரணமாக மூலவர் சிலையில் சாத்தப்பட்ட மருந்து கரைந்து விட்டதாக தெரிகிறது. தற்போது கும்பாபிஷேக பணி பாலாலயத்துடன் துவங்கி உள்ளது. இந்நிலையில் தற்காலிக அஷ்டபந்தன மருந்து சாத்தும் நிகழ்வு நாளை நடைபெற உள்ளது.

இதன் காரணமாக நாளை காலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம், 5.40 மணிக்கு விளாபூஜை நடைபெறும். தொடர்ந்து 6.30 மணிக்குள் காலசந்தி மற்றும் சிறுகாலசந்தி பூஜைகள் நடத்தி முடிக்கப்படும். பின்னர் மூலவருக்கு கலசபூஜை, கலச அபிஷேகம் செய்யப்படும். தொடர்ந்து 9.45 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் மூலவர் பீடத்தில் அஷ்டபந்தன் மருந்து சாத்தும் நிகழ்ச்சி நடைபெறும். இதன்காரணமாக நாளை காலை 6.30 மணி முதல் 10.30 மணி வரை பக்தர்களுக்கு தரிசனம் கிடையாது. அதன்பின்பே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags : Palani Temple Ashtabandana Drug Show , Palani Mountain Temple, Kumbabishekam, 4 hours, darshan, not allowed
× RELATED செங்கல்பட்டு அருகே பூச்சி...