×

பெலகாவியில் அத்துமீறி நுழைந்த மகாராஷ்டிரா அமைச்சர் கைது

பெலகாவி: நாடு சுதந்திரம் பெற்றபின் கடந்த 1956ம் ஆண்டு மொழிவழி மாநிலம் உருவாக்கப்பட்ட  நாள் முதல் தற்போது வரை கர்நாடகா-மகாராஷ்டிரா மாநிலங்கள் இடையில் எல்்லை  பிரச்னை உள்ளது. கர்நாடகாவில் உள்ள பெலகாவி மாவட்டம் முழுவதும் மற்றும்  பாகல்கோட்டை, விஜயபுரா, கல்புர்கி மாவட்டங்களில் சில பகுதிகள் என 800  கிராமங்களை மகாராஷ்டிராவுடன் இணைக்க வேண்டும் என்பது அம்மாநிலம் கோரி வருகிறது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில்  நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையில்  கூட்டணி ஆட்சி அமைந்தபின் மீண்டும் எல்லை பிரச்னை மீண்டும் பெரிதாகி இருக்கிறது. பெலகாவியில் இயங்கிவரும்  மகாராஷ்டிரா ஏகிகிரண் சமதி (எம்இஎஸ்) அமைப்பின் சார்பில் எல்லை  போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி  செலுத்தும் நிகழ்ச்சி  நேற்று நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு கர்நாடக போலீசார் தடை விதித்தனர். ஆனால், இதையும் மீறி மகாராஷ்டிரா மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் ராஜேந்திர பாட்டீல் ரகசியமாக கலந்து கொள்ள வந்தார். ஆனால்,  இதை தெரிந்து கொண்ட போலீசார்  அவரை கைது செய்தனர்.

Tags : minister ,Maharashtra ,Belagavi , Maharashtra Minister , arrested , Belagavi
× RELATED “ஊழல்வாதிகளை அஸ்ஸாமிலும்,...