×

மேட்டூர் அணை நீர்மட்டம் 110 அடிக்கும் கீழ் சரிந்தது: 5 மாதத்திற்கு பின்பு குறைந்தது

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம், 5 மாதத்திற்கு பின்பு 110 அடிக்கு கீழ் சரிந்துள்ளது. காவிரி டெல்டா பாசனத்திற்காக, நடப்பு ஆண்டில் கடந்த 13.8.19ம் தேதி நீர் இருப்பு 90 அடிக்கு அதிகமா இருந்ததால், மேட்டூர் அணையில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தண்ணீர் திறந்து வைத்தார். பிஅப்போது, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம், கேரள மாநிலம் வயநாடு பகுதியில் பெய்த கனமழை காரணமாக 15.8.19ம் தேதி 110 அடியாகவும் 7.9.19ம் தேதி முழு கொள்ளளவான 120 அடியையும் எட்டியது. இதனிடையே, டெல்டா பாசனத்திற்கு திறப்பு அதிகரிக்கப்பட்டதால், நீர்மட்டம் குறைந்தது.

ஆனால், மழை காரணமாக 23.9.19ம் தேதி 2வது முறையாகவும், 23.10.19ம் தேதி 3வது முறையாகவும் 120 அடியை தொட்டது. எனினும் மழை மற்றும் நீர்வரத்து காரமாணக தொடர்ந்து 41 நாட்கள் 120 அடியாக நீடித்த நீர்மட்டம் 23.12.19ம் தேதி 119.74 அடியானது. பின்னர், படிப்படியாக சரிந்து கடந்த 14ம் தேதி 111.44 அடியானது. இந்நிலையில் நேற்று 109.90 அடியானது. நேற்று முன்தினம் 832 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 824 கனஅடியாக சரிந்தது. நீர் இருப்பு 78.26 டிஎம்சி. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 8,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. அணைக்கு வரும் நீரைவிட, திறப்பு அதிகமாக இருப்பதால், 5 மாதத்திற்கு (15.8.19ம் தேதி) பின்பு நீர்மட்டம் 110 அடிக்கும் கீழ் குறைந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Mettur Dam , Mettur Dam, water level, 110 feet, collapsed
× RELATED மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு